டார்ஜிலிங்க்

சிக்கிம் பகுதியாக 1835 வரை இருந்த டார்ஜிலிங்க் இந்தியாவின் ஆளுமையின் கீழ்  ஒரு சுவாரசியமான நிகழ்வு,  நெட்டிசன் மோகன் குருசாமியின் முகநூல் பதிவை ஆதாரமாகம் கொண்டு இதோ உங்களுக்காக.

நேபாளம் மற்றும் சிக்கிம் இடையே எல்லையில்  ஓண்டூ டாரோ என்னும் இடத்தைக் குறித்து ஏற்பட்ட பிரச்னை அப்போதைய ஆங்கில அரசின் பார்வைக்கு வந்தது.  அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் பெண்டிங்க் தன்னிடம் பணிபுரியும்  லாயிட் மற்றும் கிராண்ட் ஆகிய இரு அதிகாரிகளை இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண அனுப்பி வைத்தார்.  அவர்களும் அங்கு வந்து ஆறு நாட்கள் தங்கி இருந்து நிலைமையை ஆராய்ந்தனர்.   அப்போது அவர்கள் தங்கி இருந்த இடம்தான் டார்ஜிலிங்க்.  இருவரும் அதனை கூர்க்கா நிலையம் டார்ஜிலிங்க் என தங்களின் குறிப்பில் எழுது உள்ளனர்.   அந்த இடத்தின் இயற்கை வளம், மற்றும் அமைப்பைக் கண்டு அதிசயித்த லாயிட் அதனை ஒரு இயற்கைச் சரணாலயமாக அமைக்க கோரினார்.   கிராண்ட் அதனை பிரிட்டிஷ் ஆளும் இந்தியாவில் இணைக்க விரும்பினார்.

பெண்டிங்க் அதனை எல்லைக் காவல் நிலையமாகவும், சரணாலயமாகவும் அமப்பதற்காக குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்தார்.   அந்த இடத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய ஹெர்பெர்ட் என்பவரை அனுப்பி அவரும் தனது ஆய்வுக்குப் பின் ஆய்வறிக்கையை சமர்பித்தார்.    பிரிட்டிஷ் அரசும் அந்த ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.  அதன் படி  அந்த நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது.   லாயிட் அந்த இடத்தின் குத்தகை பத்திரத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கவர்னர் ஜெனரல் டார்ஜிலிங்க் சீதோஷ்ண நிலையை விரும்புவதாலும்,, மற்றும் அதனை ராணுவ காவல் பயிற்சிக்கு  உகந்ததாகக் கருதுவதாலும்,   மன்னர் இதனை பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, மற்றும் அரசுக்கு அவர்கள் விரும்பும் வரையில் உபயோகிக்க அனுமதி கொடுப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார்.

தற்போது அது மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டு இருப்பினும், அங்குள்ள மக்கள் பெங்காலிகள் அல்ல.  சிக்கிம் மக்கள் தான்.   எனவே தான் பெங்காலிகளுடன் கூர்க்கா இனத்தவரால் ஒத்துப் போக முடியவில்லை.  இந்த தனி கூர்க்காலேண்ட் கேட்கும் போராட்டம் பல வருடங்களாக நடந்து வருவது தெரிந்ததே.   இந்தப் போராட்டத்தில் இதுவரை 1200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.   டார்ஜிலிங்க் மேற்கு வங்கத்துக்கு உரியது அல்ல எனினும், அவ்வளவு சிறிய பரப்பை தனி மாநிலமாக நிர்வகிப்பது மிகவும் கடினம்.

மேற்கண்டவாறு தெரிவித்திருக்கும் அவர்,  அதனை மீண்டும் சீக்கிம் உடன் இணைப்பதே மிகச் சிறந்த முடிவு என தன் பதிவின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.