ந்திய நடிகர் மிலிந்த் சோமன், தமிழில், வித்தகன், அலெக்ஸ் பாண்டியன்,  பச்சைக்கிளி முத்துச்சரம் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர்.

நடிப்பைத் தவிர வேறு பல விசயங்களில் அதிக புகழ் பெற்றவர் மிலிந்த். மாடல் நடிகராகவும் இருக்கும் இவர், நடிக்கும் விளம்பரப்படங்களில் அந்த விளம்பரப் பொருளைவிட இவருக்குத்தான் அதிக புகழ் கிடைக்கும். சிறந்த மாரத்தான் ஓட்ட வீரரான இவர், மும்பையில் 50 கிலோ மீ்ட்டர் தூர மாரத்தன் போட்டியில் வென்றவர். அது மட்டுமல்ல.. அமெரிக்காவில் நடந்த மாரத்தானில், 3 நாட்களில் 517 கி.மீ  தூரத்தை ஓடி  ‘Ultraman’ பட்டத்தை வென்றவர்.  காலணிகள் இல்லாமல் பங்கேற்கும், இந்த மாரத்தான்தான் உலகின் கடினமான மாரத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மீண்டும் நடிப்பைத் தாண்டி வேறு விசயத்தில் பேசப்படுவபவர் ஆகியிருக்கிறார்.

பிரெஞ்ச் படம் ஒன்றில் நடித்தபோது, அதில் நடித்த மிலன் ஜம்போனாயை காதலித்து 2005-ல் திருமணம் செய்துகொண்ட மிலிந்த், பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2009-ல் விவாகரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில் அங்கிதா கோன்வார் என்ற இளம்பெண்ணுடன் தான் இருக்கும் ஒளிப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி்ல் வெளியிட்டுள்ளார் மிலிந்த்.

இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா..

மிலிந்த் 51 + ல் இருப்பவர். அங்கிதாவோ 25 வயதிற்கும் குறைவானர்.

“பார்றா மனுசனுக்கு மச்சத்தை” என்று மிலிந்தை பார்த்து மூக்கு வியர்க்கிறது மும்பை திரையுலகம்.