டில்லி,

டில்லி துணைமுதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது.

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கெஜ்ரிவாலும், துணைமுதல்வராக மணிஷ் சிசோடியாயவும் உள்ளனர்.

ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ஊழல் செய்ததாக, டில்லி அரசில் இருந்து நீக்கப்பட்ட நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் பாஜ ஏஜென்டாக செயல்பட்டதாக கூறி முதல்வர் கெஜ்ரிவால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இதுதொடர்பாக ஆத்ஆத்மியில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது துணைமுதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது.

அரசு விளம்பரம், குடிநீர் திட்டம் போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஐ சோதனை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.