
குர்கான்
டில்லிக்கு அருகிலுள்ள குர்கான் பகுதியில் 5 வயதான இரட்டை சிறுமியர் பூட்டிய காரில் மாட்டிக் கொண்டு மரணம் அடைந்தனர்.
மீரட்டில் உள்ள ஒரு ராணுவ அதிகாரியின் இரட்டை குழந்தைகள் ஐந்து வயதான ஹர்ஷா மற்றும் ஹர்ஷிதா. இருவரும் கோடை விடுமுறையைக் கழிக்க தங்கள் தாத்தாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அந்தக் குழந்தைகளை தூரத்து உறவினரான 19 வயது இளைஞர் ஒருவர் கவனித்து வந்தார்.
குழந்தைகள் இருவரும் தங்கள் தாத்தாவின் இல்லத்தில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் ஒளிந்து விளையாடுவது வழக்கமாம். அதை அந்த உறவுக்கார இளைஞர் கண்டித்து வருவாராம். சம்பவத்தன்று அந்த இளைஞர் சிறிது அலுவல் காரணமாக வெளியே சென்றுள்ளார்.
தனியே இருந்த குழந்தைகள் இருவரும் காரினுள் சென்று விளையாடும் போது அந்தக் கார் கதவு பூட்டிக்கொண்டது. திறக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இருவரும் மூச்சுத்திணறி மரணம் அடைந்தனர். இதை அறியாத அவர்களின் தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளை தேடி இருக்கிறார்கள்.. 4 மணி நேரத் தேடலுக்குப் பின் பூட்டிய காரினுள் இருப்பதைக் கண்டு, அவர்களை மீட்டு மருத்தவுமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்பே இருவரும் இறந்து விட்டனர்.
இந்த மரணம் அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் துயரத்தை உண்டாக்கியுள்ளது
[youtube-feed feed=1]