ரோத்தக்:

பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்டை ரோத்தக் கோர்ட்டு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சர்ச்சைக்குறிய கருத்தைதெரிவித்த வழக்கில், ஆஜராகாத பாபா ராம்தேவுக்கு வாரண்டடை பிறப்பித்துள்ளது ரோத்தக் நீதிமன்றம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு வலியுறுத்தி வரும் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் முழங்க வேண்டும் என்று பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பாரத் மாதா கீ ஜே என்று முழங்காதவர்களின் தலையை துண்டிப்பேன் என்று அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாபா ராம்தேவின் இந்த பேச்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.

 

இதைத் தொடர்ந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சுபாஷ் பத்ரா ஹரியாணா மாநிலம் ரோத்தக் நீதிமன்றத்தில் பாபா ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கானது கூடுதல் குற்றவியல் தலைமை நீதிபதி ஹரீஷ் கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகுமாறு பாபா ராம்தேவுக்கு பலமுறை உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் பாபா ராம்தேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.