அஸ்ஸாம்
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டருக்கு நீதி விசாரணை கேட்ட ஐ ஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாமில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து இரு விவசாயிகள் சி ஆர் பி எஃப் படையினரால் ஒரு வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின் இருவரும் சி ஆர் பி எஃப். அஸ்ஸாம் மாநில காவல் துறை, மற்றும் எஸ் எஸ் பி ஆகியோர் அடங்கிய ஒரு குழுவினால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.
இதையொட்டி இந்த சம்பவம் சி ஆர் பி எஃப் ஐ சேரந்த ரஜினீஷ் ராய் கீழ் துறை சார்ந்த விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் அந்த என்கவுண்டர் போலியானது என தெரிய வந்ததாக ரஜினீஷ் ராய் தெரிவித்தார்.
இறந்தவர்கள் கையில் ஆயுதங்கள் இல்லை எனவும், இறந்த பின் அவை திணிக்கப்பட்டவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என ரஜினீஷ் ராய் ஆலோசனை கூறியுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் மேலும் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த போலி என்கவுண்டர் பாதுகாப்புத்துறையின் பல பிரவுகளின் அதிகாரிகளையும் உள்ளடக்கியது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று திடீரென அவர் ஆந்திராவில் சித்தூரில் உள்ள தீவிரவாத தடுப்புப் பயிற்சிப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த மாறுதல் அதிகாரிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.