டில்லி,

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை -ஜூன் 14) தொடங்குகிறது

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 28-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 29ம் தேதி நடைபெறுகிறது

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாளாகும்

வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதியும் நடைபெறும்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் உதவி அதிகாரிகளாக சட்டப் பேரவைச் செயலாளர் (பொறுப்பு) க.பூபதி, இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியம் ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.