சென்னை,

ங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை ஒழுங்குபடுத்தும் தமிழக அரசின் புதிய விதிகளை எதிர்த்து ரியல்எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலங்கள் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகையை 33 சதவிகிதம் குறைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

ஆனால், சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய விற்பனை, பரிமாற்றம், தானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தினை 4 சதவிகிதமாக உயர்த்தியும் உத்தரவிட்டது.

இதற்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

ஏற்கனவே சென்னை  ஐகோர்ட்டு விளைநிலங்களை, வீட்டுமனைகளாக  பதிவு செய்ய தடை விதித்திருந்தது.

அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் அறிவுரையின்படி மே 5ந்தேதி,  அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதி முறைகளை வெளியிட்டது.

அதன்படி தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் ஒழுங்கு முறை விதி -2017 உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியது.

அதைத்தொடர்ந்து மே 12ந்தேதி சென்னை ஐகோர்ட்டு,  அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.