சென்னை:

ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தனியார் பால் நிறுவன ஆதரவாளர்களின் வேலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசின் ஆவின் பால்தான் சுத்தமான பால் என்றும் தனியார் பால் நிறுவனங்கள் கலப்பட வேலைகளில் ஈடுபடுகின்றன என்றும் பால்வளத்துறை அமைச்சர் ரஜேந்திர பாலாஜி தொடர்ந்து தெரிவித்துவருகிறார்.

“தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ரசாயனத்தை கலக்கிறார்கள்.  இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும்.
இதுகுறித்து ஆய்வு செய்ய தனியால் பால் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன” ” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அதிர்ச்சிகரகுற்றச்சாட்டால் தனியார் பால் விற்பனை வெதுவாக சரிந்தது.

இந்நிலையில் அரசு நிறுவனமான ஆவின் பாலில் புழு இருப்பது போன்ற படம் சமூகவலைதளங்களில் வைரலாகி  வருகிறது. பிரீசரில் வைக்கப்பட்டிருந்த ஆவின் ஆரஞ்சு பாலில் பெரிய பெரிய புழுக்கள் இருப்பது போல அந்த படத்தில் உள்ளது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதே நேரம், தனியார் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் குற்றம் சாட்டியதை அடுத்து அந்த நிறுவன பால் பாக்கெட்டுகளின் விற்பனை வெகுவாக சரிந்தது. இதையடுத்து தனியார் பால் ஆதரவாளர்கள், ஆவின் பாலின் நற்பெயரைக் கெடுக்க புழு இருப்பது போன்ற படத்தை செட் அப் செய்து சமூகவலைதளங்களில் பரவ விட்டிருப்பார்களோ என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.