சென்னை,
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் வருவதையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிகாலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில், இன்று தமிழகம் வருகை புரிகிறார்.
டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரணாப், இங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒலிமுகமதுபேட்டை- சங்கரமடம்- காமாட்சியம்மன் கோயில் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.