சென்னை:
தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பண அதிகாரம் வெளிப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்காக சசிகலா கோஷ்டி அதிமுக எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வளைத்தது அம்பலமாகியுள்ளது. தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தொலைக்காட்சிகள் விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய எம்எல்ஏஸ் ஃபார் சேல் விவாத நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் பண அதிகாரம் வெளிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
பணத்தால் எதையும் வாங்க முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது’’ என்றார். மேலும் தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.