மதுரை,
மதுரை அருகே உள்ள மேலூரில் நடைபெற்ற பால் பரிசோதனை முகாமில் 14 நிறுவனங்களின் பால்கள் தரமற்றவை, கலப்படம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பால் நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பாலில் கலப்படம் நடப்பபதாக கடந்த மாதம் பரபரப்பு குற்றச்சாட்டை தனியார் பால் நிறுவனங்கள் மீது சுமத்தினார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அதைத்தொடர்ந்து தனியார் பால்வ நிறுவனங்கள் சோதனைக்கு தயார் என்றும் கூறியது. அதைத் தொடர்ந்து தனியார் பால்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மக்களின் அன்றாடபயன்பாடான பாலில் கலப்படம் என்ற செய்தி தமிழக மக்களி டையே கடும் பீதியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து ஆராய, மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் கடந்தவாரம் பால் பரிசோதனை முகாமை மதுரை யில் நடத்தினால். அப்போது மாவட்டம் முழுவதும் இருந்து 108 பால் மாதிரிகள் எடுத்துவரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஒரே ஒரு பாலில் மட்டும் கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தனியார் பாலில் சோப்பு ஆயில் கலந்திருப்பது இயந்திரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த பாலை முழு ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மதுரை அருகே உள்ள மேலூர் பகுதியில் பால் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலூரில் நடந்த பால் தர பரிசோதனையில் 73 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 14 மாதிரிகள் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தகவல் பரவியதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பால் நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.