புதுச்சேரி,

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.5,500 ஆக உயர்த்தி உள்ளதாக  அமைச்சர் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் புதுச்சேரி மீனவர்களுக்கான புதிய அறிவிப்பை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் அறிவித்தார்.

அதில், மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 4 ஆயிரத்தில் இருந்து,  ரூ.5,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறினார்..

மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களிலிருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டதை அடுத்து நிவாரணத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மல்லாடி கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே, மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரண நிதித்தொகை ரூ.5500 வழங்கப்படும் எனறு புதுச்சேரி அரசு  உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.