டில்லி:

டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் உள்ள எட்டு தளங்களில்,  தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  உடனடியாக இரு தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

மின்கசிவு காரணமாக சிறிய அளவிலான தீவிபத்து ஏற்பட்டது. பெரிய ஆபத்து ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இன்றுதான் அதிமுகவின் சசிகலா அணியினர் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்ய இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள், இந்த தீ விபத்து காரணமாக பிராமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய முடியாமல் காத்துக்காண்டிருக்கிறார்கள்.