சென்னை,

பாம்பன், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் குறைந்துள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் ஜூன் 1ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வங்கதேசம் அருகே, 108 கி.மீ. தொலைவில் தென்மேற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்க செல்லும் விதமாக தமிழகத்தில் பாம்பன், நாகை மற்றும் புதுச்சேரியில் புதுவை,  காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.