லண்டன்:

சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் இலங்கையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று லண்டனில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 44.3 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 192 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]