நெட்டிசன்:

சென்னையில் சுரங்க ரயில் பாதை பணிகள் நடக்கும் பகுதிகளில் பூமியில் பிளவு ஏற்படுவது, சிமெண்ட் ஊற்று உருவாவது என்று நடப்பதால் மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் கத்தாரில் சுரங்க ரயில் பணியில் ஈடுபட்ட பொறியாளர் சாதிக் பாட்சா, “ சுரங்க பணி நடக்கும்போது இப்படி ஏற்படுவது உலகம் முழுதும் உண்டு” என்று முகநூல் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது பின்னூட்டம்:

“சாலைகளுக்கும் , தோண்டப்பட்ட இடங்களுக்குமுள்ள இடைவெளி நிரப்பப்படுகிறது. இதில் சிறிய பிழைகள் நேரும்போது கலவை மேலே வருகிறது.தவிர இந்தியாவில் மட்டும் தான் இவ்வாறு

நடைபெறுகிறது. மற்ற நாடுகளில் வானத்தில் மெட்ரோ நிலையங்களை தயாரித்து பூமிக்கு இறக்குகிறார்கள் என்பது போன்ற எண்ணம் நம் மக்களுக்கு உள்ளது. இது ஒரு வகை தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலப்படத்தில் பறந்து பறந்து அடித்தால் நம்புவதைப் போன்றது.

நான் சிங்கப்பூர் , கத்தார் போன்ற நாடுகளில் இதே துறையில் வேலை பார்த்ததால் கூறுகிறேன். நம்ம சென்னை போலவே சிங்கப்பூரிலும் லாரி இறங்கிய சம்பவம் உண்டு. முழுதாக ஒரு சுரங்க ரயில் நிலையமே கட்டடப் பணி நடக்கும்போது இடிந்து விழுந்து முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. எத்தனை தொழிலாளர்கள் இறந்தார்கள் என்ற செய்தி கூட அங்கே வெளிவராது. இங்கே நாம் மீம்ஸ் போட்டு காமெடி செய்து கொண்டுள்ளோம்” – இவ்வாறு பொறியாளர் சாதிக் பாட்சா தெரிவித்துள்ளார்.