சென்னை:

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் பாஜ தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இன்று மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது.
வெடி மருந்துகளுடன் கூடிய பார்சல் மற்றும் மிரட்டல் கடிதம் ஒன்று இன்று வந்துள்ளது.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரை தொடர்ந்து அலுவலகத்தில் வேறு எங்கும் வெடிகுண்டுகள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய மோப்ப நாய் வரழைக்கப்பட்டு அலுவலகம் முழுவதும அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

வெடிகுண்டு துப்பறியும் மற்றும் செயழிலக்கச் செய்யும் பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளுடன் வந்த சோதனைனயிட்டனர். சோதனையில் எவ்வித வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. எனினும் பார்சல் வந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜ அலுவலகத்திற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.