சென்னை,
உச்சநீதி மன்றம் நாடு முழுவதும் உள்ள மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் மது விற்க தடை செய்துள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலைய கேன்டீனில் மட்டும் எப்படி மது விற்பனை செய்யப்படுகிறது என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன் போன்ற இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி சாகுல் ஹமீது என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதி மன்றம்,
நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள விமான நிலையங்களில் எவ்வாறு மது விற்பனை செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து 3 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது