போபால்,

த்திய பிரதேச பாரதியஜனதா அரசு விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் பரிதாபமாக துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர்.

இதையடுத்து துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்க ராகுல் காந்தி இன்று ம.பி.விரைந்தார்.

ஆனால், அவரை துப்பாக்கி சூடு நடைபெற்ற மண்ட்சவுர்  பகுதிக்கு வரக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்து. ஆனால், தடையை மீறி செல்வேன் என்று ராகுல்  நீமூச் வரை  காரில் வந்தார்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் மூலம்  மண்ட்சவுர் பகுதிக்கு செல்ல முயன்றார். ஆனால், போலீசார் இடையிலேயே அவரை வழிமறித்து கைது செய்தனர்.

இதற்கிடையில், துப்பாக்கி சூட்டில்  இறந்த விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களிடம் ராகுல் காந்தி  தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்காமல் திரும்பி போகமாட்டேன் என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக அந்த பகுதியில் மேலும்  பரபரப்பு நிலவி வருகிறது.