சென்னை,

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 24 நாட்கள் நடைபெறும் என்று என்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் சுமார் 11,15 மணி அளவில் தமிழக சட்டமன்ற ஆய்வு குழு கூட்டம் கூடியது.  சுமார் 45 நிமிடம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்தும், சபையில் நிறைவேற்றப்பட வேண்டியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

எற்கனவே நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அது முடிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறாமலேயே சட்டமன்றம் முடக்கப்பட்டது.

இதன் காரணமாக சட்டசபையை உடனே கூட்டி மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து சட்டமன்றம் ஜூன் 14ந்தேதி மீண்டும் தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து சட்டமன்றக்கூட்டத் தொடர் இந்த மாதம் (ஜூன்) 14 தொடங்கி, அடுத்த மாதம் (ஜூலை) 19ந்தேதி வரை 24 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டதாக சட்டசபை சபாநாயகர் தனபால் தெரிவித்து உள்ளார்.

இந்த கூட்டத்தொடரின்போது மானியக்கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும் என்றும், மத்திய அரசு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த உள்ள ஜிஎஸ்டி மசோதாவும் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.