சென்னை,

பிஎஸ் அணியினரின் இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றினாலே அடுத்த 24 மணி நேரத்திற்குள்   அ.தி.மு.க. அணிகள்  இணையும் என்றும் மா.பா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டு வரும் சர்ச்சை காரணமாக எடப்பாடி அணியின ருக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக ஆட்சி கவிழும்  நிலை எற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியதாவது,

எடப்பாடி அணியை சேர்ந்த 29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை பார்த்தார்கள் என்பதால், அவர்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்றோ, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் என்றோ கருதமுடியாது.

டி.டி.வி.தினகரனை பார்த்த எம்.எல்.ஏ.க்கள் அரசை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். எனவே இந்த அரசு கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை.

எங்களை பொறுத்தவரை 2 நிபந்தனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம்.

அதாவது சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கவேண்டும்.

மற்றொன்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான்.

இந்த நிபந்தனைகளை எளிதில் நிறைவேற்றும் காலம் தற்போது நெருங்கிவிட்டது.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் 24 மணி நேரத்தில் அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளும் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.