சமச்டிபூர்
பீகார் சமச்டிபூர் 12ஆம் வகுப்பு கலைப்பிரிவில் 82.6% மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்ற மாணவர் கணேஷ் குமார் என்பவரின் உண்மை வயது 42 என தெரிய வந்துள்ளது
இந்த வருடம் நடந்த 12ஆம் வகுப்பு கலைப்பிரிவு தேர்வில் சமஷ்டிப்பூரில் ஒரு பள்ளியில் படித்து வந்த கணேஷ்குமார் என்னும் மாணவர் 82.6% மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக அறிவிக்கப்பட்டார். இவர் தனது உண்மை வயதான 42ஐ மறைத்து 24 என மாற்றி பதிந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
பீகார் மாநில கல்வித்துறை சேர்மேன் ஆனந்தகுமார் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளார், மேலும் கூறுகையில் அவர் மேல் கைது நடவடிக்கை எடுக்கக் கோரப் போவதாகவும், அவருடைய தேர்வை இடைநீக்கம் செய்யப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கணேஷ்குமாருக்கு ஒரு ஷோ-காஸ் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாகவும், இன்னும் மூன்று நாட்களுக்குள் அவருடைய பதிலை எதிர்பார்ப்பதாகவும் கல்வித்துறை தெரிவித்தது.
மதுபானி நகரத்தை சேர்ந்த நேகாகுமாரி என்னும் மாணவி அடுத்த மதிப்பெண்ணான 80.6% பெற்றிருப்பதால் அவர் முதல் மாணவியாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது