நாளை திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கருணாநிதி குறித்து பிரபல கவிஞர் கவியரசு கண்ணதான் எழுதிய கவிதை….

சதாவதானத் திறமை!
நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!
கருணா நிதியின் தனித்தமிழ் அரசு
பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது
வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்!
வாழிய கலைஞர்! வாழிய தமிழர்!
-கவிஞர் கண்ணதாசன்
Patrikai.com official YouTube Channel