நெட்டிசன்:

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களது முகநூல் பதிவு

ஒரே பிரச்சனையை குறித்த வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகளை உயர்நீதிமன்றங்கள் வழங்கு கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மாட்டிறைச்சி தொடர்பான வழக்கில் மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை வழங்கியுள்ளது. ஆனால் கேரளா, ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்கள் இதற்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

இதுபோலவே நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளில் உயர் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகள் ஒரே வழக்கு சிக்கல்களுக்கு மாறுபடுகின்றன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். சிக்கல்களை ஒன்றாக பாவிக்க வேண்டுமென்ற நிலைப்பாடு இருந்தும் இந்த முரண்பாடுகள் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தொடர்கின்றது.

இதுவரை நூற்றுக்கும்  மேலான வழக்குகளில் இப்படியான போக்கு நடந்தேறியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்திலும், நீதிமன்ற நடைமுறையிலும் இந்த சமன்பாடற்ற நிலையை போக்க வேண்டும்.

இது காலத்தின் கட்டாயம்.

[youtube-feed feed=1]