ஜியோனி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக, ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் இன்று வெளியாகிறது. இதில் 4 காமிராக்கள் உள்ளது.
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி புதிய ரக மொபைல் போனை இன்று அறிமுகம் செய்கிறது.
சீனாவில் இன்று மாலை நடைபெறும் விழாவில் ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்கு முன்பாக ஜியோனி சார்பில் வெளியான போன் குறித்த டீஸரில் ஸ்மார்ட்ஃபோனின் பெயரும், இந்த போனில் 4 காமிராவும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முன்பக்கம் இரண்டு கேமராவும், பின்பக்கம் 2 கேமராவும் உள்ளது.
பின்பக்கம் உள்ள இரண்டு கேமராவில் ஒன்று 16 மெகாபிக்சலும், மற்றொன்று 8 மெகாபிக்சல் திறனும் கொண்டதாகவும், முன்பக்க கேமராவில் ஒன்று 20 மெகாபிக்சலும், மற்றொன்று 8 மெகாபிக்சல் திறனும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5.5 இன்ச் எச்டி திரை, 6 ஜிபி ரேம், 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் வசதிகளுடன் ஜியோனி எஸ்10 வெளியாகும் எனத் தெரிகிறது. 3700 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி, கருப்பு மற்றும் கோல்ட் கலர் என இரண்டு வண்ண நிறங்களில் இன்று வெளியாகிறது ஜியோனி சீனா எஸ்10 சீனா போன்.