தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது யூதர்களை அவமதித்துவிட்டதாக விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சுற்றுப்பயணம் மேறண்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர், இஸ்ரேலின் ஹோலோகாஸ்ட் நினைவிடத்திற்கு சென்றார்.
இரண்டாம் உலகப்போரின் போது லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரின் நாஜிப்படைகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது நினைவாத உருவாக்கப்பட்டது இந்த நினைவிடம்.
இதை சுற்றிப் பார்த்த டிரம்ப், அங்குள்ள குறிப்பேட்டில், “என் நண்பர்களுடன் இங்கே வந்ததற்கு பெருமைப்படுகிறேன். இது ஒரு அற்புதமான இடம், என் வாழ்நாளில் இதை மறக்கவே மாட்டேன்” என்று எழுதியிருந்தார்.
“கொடூரமாக லட்சக்கணக்கானவர்கள் கொல்லபட்டதன் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், ஏதோ இன்பச்சுற்றுலா சென்று அனுபவித்ததைப் போன்று டிரம்ப் எழுதலாமா” என்று தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த 2008-ம் வருடம், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கு வந்தபோது நெகிழ்ச்சியுடன் தனது நினைவுகளை குறிப்பேட்டில் பதிந்தார். டிரம்ப் இப்படி எழுதியிருக்கிறாரே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.