சென்னை,
தமிழகத்தில் இன்றோடு அக்னி நட்சத்திரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசான மழை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளதும.
தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. அக்னி நட்சத்திரம் வருகிற 28ம் தேதியுடன் முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில், அனல் காற்று வீசியது. தமிழகத்தில் 24 இடங்களுக்கு, அனல் காற்று குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பகலில் வெளியே வருவதை தவிர்த்து வந்தனர்.
தற்போது ஓரளவு அனல்காற்று தணிந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இன்று (மே 24) முதல் அடுத்த 4 நாட்களுக்கு பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் வெப்பம், அதிகபட்சமாக 100 டிகிரியாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.