
சென்னை,
கோட்டையில் தமிழக முதல்வருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று அடுத்தடுத்து சந்திப்பு நடைபெற்று வருகிறது.
இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாளை மாலை தமிழக முதல்வர் டில்லி புறப்பட உள்ள நிலையில் இன்று தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், துணைசபாநாயகர் தம்பித்துரை உள்பட பலர் அடுத்தடுத்து சந்தித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்பட மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து அதிமுக அம்மா அணியில் நீடித்து வரும் உள்கட்சி பிரச்சினையை தீர்க்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பின் பேரில் தோப்பு வெங்கடாசலம் தலைமையில் 11 எம்எல்ஏ-க்கள் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்தனர்.
அவர்கள் முதல்வரிடம் அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை உடனே கூடுமாறு கோரிக்கை விடுத்தனர்.‘
அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சந்தித்தார்.
இதன் காரணமாக கோட்டை வட்டாரம் பரபரப்பு அடைந்து வருகிறது.
[youtube-feed feed=1]