மும்பை,
மும்பை பேரணியில் கலந்துகொள்ள வரும் பிரதமர் மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம் பேசியுள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த மர்ம நபர் ஒருவர்.
இதுகுறித்து போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் மத்தியபிரதேசம் சான்ட்ரா மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. போனில் வந்த எண்ணை ‘அன்நவுன்’ எண்ணை பார்த்ததும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் தொடர்ந்து கால் வந்ததும் அவர் போனை எடுத்து பேசியுள்ளார்.
அப்போது, போனில் பேசிய நபர், மும்பை பேரணியில் கலந்துகொள்ள வரும் பிரதமர் மோடியை கொல்ல வேண்டும் என்றும், அதற்காக ரூ.50 கோடி தருகிறோம்.. தேவையென்றால் மேலும் தருகிறோம் என்றும் பேரம் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனயாக அருகிலுள்ள லோக்கல் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து போன் வந்த குஷான் சோனி என்பவர் கூறியதாவது, சம்பவத்தன்று தெரியாத எண்ணில் இருந்த தனக்கு போன் வந்ததாகவும், அவர் பேசிய எண் +79651219.
அதில் பேசிய நபர் தான் பாகிஸ்தானில் இருந்த பேசுவதாகவும், பிரதமர் மோடியை கொலை செய்தால் ரூ.50 கோடி பணம் தருவதாக கூறியுள்ளார்.
மேலும், மும்பை பேரணியில் கலந்துகொள்ளும் மோடியை கொலை செய்ய ஏற்கனவே இரண்டு நபர் நியமிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த செயலை செய்தால் ரூ.50 கோடி பணம் தரப்படும் என்றும், தேவையென்றால் கூடுதல் பணம் தருவதாகவும் கூறி உள்ளார். என்று பேசியதாகவும் கூறியுள்ளார்.
இந்த சீரியசான போன் தகவல் குறித்து, உடனே அருகிலுள்ள போலீசாரிடம் புகார் கூறி உள்ளதாகவும் கூறினார்.
இந்த அனோமதேய கால் குறித்து, சாட்னா போலீஸ் எஸ்பி மிதிலேஷ்குமார் கூறியதாவது,
“நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணையின் பின்னர் மேலும் தெளிவாக தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம். இது ஒரு ஏமாற்று அழைப்பா என்பது குறித்து தெரிய வரும் என்று கூறினார்.
மேலும் ஆரம்பக்கட்ட விசாரணையில், போனில் பேசிய எண் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுளளது என்றும், அனாமதேயா கால் குறித்த அனைத்த தகவல்களையும் சோனி தங்களிடம் ஒப்படைததுள்ளார் என்றும், இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல அனோமதயே போன் கால் ஒன்றில், மாநில விதான் சபா மற்றும் போபால் ரெயில் நிலையம் குண்டு வைத்து தகர்ப்படும் என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.