திருச்சி :
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் அமைக்க ஏதிர்ப்புப் தெரிவித்த எங்களை கைது செய்த காவல்துறையினர் சிறையில் எங்களை நிர்வாணப்படுத்தினார்கள் என்று மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கடந்த 15-ம் தேதி நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கோயம்புத்தூரில் இருந்து ரயிலில் புறப்பட்டார்கள். . வளர்மதி, சுவாதி, தினேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்களான அவர்கள் ரயிலில் வரும் வழியிலேயே தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.
.திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்த மாணவர்களை சிறை நிர்வாகம் சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் பெண்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாக அதிர்ச்சி புகார் எழுந்தது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி பிணையில் வெளிவந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திருச்சி சிறையில் எங்களை சோதனை என்ற பெயரில் மாணவிகளை நிர்வாணப்படுத்தினார்கள். மேலும் எங்களை சொல்ல தகாத வார்த்தையில் வசைபாடினார்கள் . ” என்று அந்த மாணவி வளர்மதி தெரிவித்தார்.