டில்லி,

ருமான வரித் துறை ஒரு நபரின் ஆதாரை  நிரந்தர கணக்கு எண் (PAN) உடன் இணைக்க புதிய இணையதள வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

வருமான வரி கட்டுபவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது வருமான வரித்துறையிடம்  IT returns செய்பவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அரசின் 90க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அரசு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு ஆரம்பத்தில்  ஆதாரை கட்டாயமாக்குவது ஏன் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.  வருமான வரி பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படுவதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனால் தொடர் விசாரணையின்போது, பான் கார்டுகளைப் பயன்படுத்தி மக்கள் வரி ஏய்ப்பு செய்வதை சுட்டிக்காட்டி மத்திய அரசு வழக்கறிஞர்  பேசினார். அதைத்தொடர்ந்து பான் கார்டுடன் ஆதார் இணைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது வருமான வரித்துறையின் இணைய தளத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி எளிய முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த இணையதளத்தில் சென்று ஐடி ரிட்டன் தாக்கல் செய்யும் நபர் தங்களுடைய பான் எண் கொடுத்து இணைக்கலாம்.

வளைதளத்தின் இணைப்புக்கு சென்று,  ஒரு நபர் தனது PAN எண், ஆதார் எண் மற்றும் “ஆதார்  அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயர்”  டைப் செய்து தொடர வேண்டும்.

நாம் பதிவு செய்யும் தகவல்கள்  உதய் (இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்)  நிறுவனத்தால் சரிபார்ப்பிற்குப் பின்னர், இணையத்தில் இணைப்பது குறித்து உறுதி செய்யப்படும்.

ஆதார்  பெயரில் எந்தவொரு சிறிய பொருத்தமில்லாத தகவல் வழங்கப்பட்டால், ஆதார்  ஓபிடி. (OPD – ஒரு முறை கடவுச்சொல்) கேட்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் தவறான தகவல் பதிவு செய்தால் அதுகுறித்து நாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள  மொபைல் எண்ணுக்கு ஓடிபி  மற்றும்  நமது  மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பப்படும்.

பான் கார்டுன் ஆதார் இணைக்கும்போது, நாம் பதிவு செய்யும் பிறப்பு தேதி, பாலினம் போன்றவது சரியாக, ஏற்கனவே பதிவான தகவல்கள்தானா என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

தற்போது வருமான வரித்துறை இணையதளத்தில் ஆதார் பதிவு குறித்து மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஐடி ரிட்டன் தாக்கல் செய்பவர்கள் எளிதாக தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இதன் காரணமாக பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகிறது.

கீழே உள்ள இணையதள லிங்கை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் பதிவு செய்யலாம்.

https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html