ரஜினிகாந்த், வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார். தினமும் மூன்று அல்லது நான்குமாவட்ட ரசிகர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இதன்படி 18 மாவட்ட ரசிகர்கள் சந்திக்க இருக்கிறார்கள். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து விடுபட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்கு சுமார் 300 பேர் என்று 900 முதல் 1200 ரசிகர்கள் வரை தினமும் சந்திப்பார்கள். ரசிகர்களுக்கு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டை இருப்பவர்கள்தான் ரஜினியை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.