மும்பை:
உலகப்புகழ் பெற்ற பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக மும்பை வந்துள்ளார்.
இன்று அதிகாலை மும்பை விமான நிலையத்திற்கு ஜஸ்டின் பீபர் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து லோவர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலுக்கு சென்றார்.
இவருக்கு கடும் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. சல்மான் கானின் பாதுகாவலரான ஷெரா, ஜஸ்டீன் பீபரின் பாதுகாவலராக பணிபுரிகிறார் . மேலும் 500 பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“மேலும் 25 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று நவி மும்பையின் காவல்துறை ஆணையர் ஹேமந்த் நங்ரேல் தெரிவித்துள்ளார். மேலும் ஹெலி கேமராக்களும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ளன.
இன்று மாலை நான்கு மணிக்கு இவரது இசை நிகழ்ச்சி மும்பையில் நடக்க இருக்கிறது. இவர் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.