Female NEET candidate in Kerala asked to remove innerwear
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு நேற்று (மே-7) நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு முன் மாணவர்களிடம் மேற்கொண்ட சோதனையால், தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனை செய்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுந்த சென்ற பெண்ணின் உள்ளாடையை க கழட்ட சொன்னதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அந்த மாணவியின் தாயார் கூறுகையில், எனது மகள் தேர்வு மையத்திற்குள் சென்று திரும்பி வந்து தன்னுடைய உள் ஆடையை என்னிடம் கொடுத்து சென்றார் என்றார்.
இதேபோல் மற்றொரு பெண் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்திருந்தார். அவரது பேண்டில் உலோகத்தால் ஆன பட்டன் இருப்பதால் தேர்வறைக்குள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவரது தந்தை வெகுதூரம் சென்று தன்மகளுக்கு புதிய ஆடை வாங்கி கொடுத்து தேர்வறைக்குள் அனுப்பி வைத்தார்.
நீட் தேர்வின் போது இந்த கெடுபிடி காரணமாக மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் புகார் தெரவித்தனர்.