சென்னை:

பாகுபலி 2 கடந்த மாதம் 28-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட பாகுபலி-2 மாபெரும் வெற்றி பெற்றதுடன் புதிய வசூல் சாதனையும் படைத்து வருகிறது. ரிலீஸ் ஆன 6 நாட்களில் ரூ.735 கோடி வசூலித்தது. தொடர்ந்து 9 நாட்களில் ரூ.1,000 கோடி வசூல் சாதனையை கடந்தது.

இதில் ரூ.800 கோடி இந்தியாவிலும், ரூ.200 கோடி வெளிநாடுகளிலும் வசூலாகியது. இந்திய படங்களிலேயே ரிலீசான 9 நாளில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் படம் ‘பாகுபலி-2’ என்ற சாதனை படைத்துள்ளது.

பழைய சாதனைகளை முறியடித்துள்ளது. வெளிநாட்டிலும் வசூல் சாதனை படைத்த முதல் இந்தியப் படம் பாகுபலி-2 என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டும் ரூ.100 கோடி வசூலாகி உள்ளது. இது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை என்று சினிமா உலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.