திருச்சூர்,
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் “ பூரம் திருவிழா” பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.
கேரளாவின் திருச்சூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
கேரளாவில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மே மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
பூரம் என்பது இந்துப் பஞ்சாங்கத்தில் உள்ள நட்சத்திரங்களுள் ஒன்றாகும். இந்துப் பஞ்சாங்கத்தில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. திருத்சூரிலுள்ள ஒவ்வொரு கோவிலும் வேறுபட்ட நட்சத்திரங்களுக்கேற்ப பல்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும், பல வருடங்களுக்கும் மேலாக, பூரம் நட்சத்திரம் அதனுடைய கோயில் திருவிழாக்களுடன் இணைந்து சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
ஆண்டுதோறும் மே மாதம் சித்திரை பூர நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் இந்த பூரத்திருவிழா, கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும்.
அலங்கரிக்கப்பட்ட ஏராளமான யானைகளின் அணிவகுப்பு இதில் இடம் பெறுவது, தனிச்சிறப்பு.
இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள், மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன் கோயில்கள் உள்ளன.
கேரளாவின் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழா என்பதைத் தனது ஆடம்பரம் மற்றும் அழகு காட்சி மூலம் பூரம் திருவிழா நிரூபிக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள், திருச்சூரின் தேக்கின் காடு மைதானத்தில் பூரம் விழாவைக் கொண்டாட ஆண்டு தோறும் குவிந்து விடுவார்கள். யானைகள் அணிவகுப்பு, குடமாட்டம், படகுப் போட்டி, மற்றும் செண்டமேளம், பஞ்சவடியம் ஆகிய இசைகளை இசைக்கலைஞர்கள் தங்கள் உன்னதமான திறனோடு இசைத்து, இசைவிருந்து வழங்வது மனதிற்கு மிகப்பெரிய திருப்தியாக அமையும்.
கண்கவர் வாண வேடிக்கை விண்ணை முட்ட , கடைசி இரண்டு நாட்கள் பழங்கால பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக வழங்கப்படும்.
இந்த ஆண்டின் பூ ரம் திருவிழா திருச்சூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செண்டு மேளம் கொட்டுமேளம் என பாரம்பரிய இசையுடன் விழா தொடங்கியது.
யானைகளின் அணிவகுப்பை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
100 யானைகள் அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து சிவபெருமாள் அருள் பாலிக்கும் வடக்குநாதன் கோவிலுக்கு வந்து சேர்ந்தன.விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக கடைசி நாளில் வாண வேடிக்கைகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் வானவேடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.