ரமண மகரிஷி பிறந்தநாள் (7189)
அத்வைத வேதாந்த நெறியை போதித்த ரமண மகரிஷி பிறந்தநாள் இன்று. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி , 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. இந்த ஆசிரமம் உலகப்புகழ் பெற்றது.
ஆன்மிக நூல்கள் பல எழுதியுள்ளார் ரமண மகரிஷி. அவை,
- உபதேச உந்தியார்
- உள்ளது நாற்பது
- உள்ளது நாற்பது அனுபந்தம்
- ஏகான்ம பஞ்சகம்
- ஆன்ம வித்தை
- உபதேசத் தனிப்பாக்கள்
- ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
- ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
- நான் யார்?
- விவேகசூடாமணி அவதாரிகை
- பகவத் கீதா ஸாரம்
- குரு வாசகக் கோவை
- ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
- ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை – விளக்கவுரை
நம்மாழ்வார் நினைவு நாள் (2013)
இயற்கை போராளி என்று அழைக்கப்படும் நம்மாழ்வார் நினைவு நாள் இன்று. தஞ்சை மாவட்டத்தில் 1938 ல் பிறந்த இவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2007ல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் கௌரவ முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்தார். களப்பணியில் ஈடுபடாமல், வெறு கோப்புகளிலேயே அங்கு பணிகள் நடப்பதை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆனால் பயனில்லை. ஆகவே பணியில் இருந்து வெளியேறினார். ஜப்பானிய சிந்தனையாளர் மற்றும் விவசாயி, மசனோபு ஃபுக்குவோக்கா ஈர்க்கப்பட்டு இயற்கை அறிவியலாளர் ஆனார்.
இயற்கையை அழிக்கும் பூச்சி கொல்லிகள், மீத்தேன் வாயு திட்டம், மரபணு சோதனைகள, பி.டி. கத்தரிக்காய் போன்றவற்றை எதிர்த்து போராடினார். வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி செய்வதையும், விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை எதிர்த்தும் குரல் கொடுத்தார்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்களை இயற்கை முறையில்சீரமைத்தார். இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்துத்தந்தார். அறுபதுக்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு மாவட்டத்தில் நிறுவினார்.
“தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்’ என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றுகுகம் கால்நடையாகவே சென்று, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். “பேரிகை’ என்ற இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.
இன்னும் இவரது பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம். அவரது பிறந்தநாளான இன்று இயற்கையை காக்க உறுதிகொள்வோம்.
சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட தினம் (2003)
ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று. பேரழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டி அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி, ஈராக் மீது போர் தொடுத்தன. சதாம் உசேனை பிடித்து தூக்கிலிட்டன. ஆனால் பிறகு, அந்த குற்றச்சாட்டு , திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட பொய்யான உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதை அந்நாடுகளே ஒப்புக்கொண்டன.