ருத்து சொல்வதிலும், கவிதை எழுதுவதிலும் பெற்ற பிரபலத்தைவிட, சர்ச்சை வார்த்தைகளால் அதிக பிரபலம் அடைபவர் மனுஷ்யபுத்திரன் என்று ஒரு விமர்சனம் உண்டு.

சக கவிஞரை, “இணைய பொறுக்கி” என்று அவர் முகநூலில் எழுதியது குறித்த சர்ச்சையே ஓயவில்லை. அதற்குள், “பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனை தன்னிலை அறியாதவர் என்று மனுஷ்யபுத்திரன் அவமதித்துவிட்டார்” என்று ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

மனுஷ்யபுத்திரன்

தனது உயிர்மை பதிப்பகம் சார்பாக, சுஜாதா விருது அளிக்கும் விழாவை நேற்று நடத்தினார் மனுஷ்யபுத்திரன். நிகழ்ச்சிக்கு தலைமையேற்பதாக இருந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், நிகழ்ச்சிக்கு வரவில்லை. இது குறித்து இன்று தனது முகநூல் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கிறார்.

அந்த பதிவில், “நேற்றைய நிகழ்வில் சில குறைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் இருந்தன. உரைநடை விருது பெற்ற அ.ராமசாமி குறித்து பேசுவதாக இருந்த ஜென்ராம், இமையம் இருவருமே கடைசி நிமிட்த்தில் வர முடியாமல் போயிற்று. ஜென்ராமிற்கு ஊடகவியலாளர்களுக்கே உரிய நெருக்கடி. இமையத்தின் மகனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு அவரை வரவிடாமல் செய்துவிட்ட்து. ஆனால் அ.ராமசாகி அவர்களுக்கு அதைப்பற்றி எந்தப் புகாரும் இல்லை.

தலைமை ஏற்பதாக இருந்த பிரபஞ்சன் ஏன் வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபஞ்சன்

இதுதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

இது குறித்து கவிஞர் லஷ்மி சரவணக்குமார், “மனுஷ்யபுத்திரன் மனநோயாளி, நாய்க்கு வெறிபிடித்தால் யாரையாவது பார்த்து குறைத்துக்கொண்டே இருக்கும். அது போல, எப்போதும் தான் டிரண்டில் இருக்க வேண்டும் என்பதால் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார் அவரது பேச்சு, எழுத்தை புறம்தள்ளி கடந்து செல்வதே புத்திசாலித்தனம்” என்றார்.

மேலும் சில படைப்பாளிகள், “தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் பிரபஞ்சனும் ஒருவர். அவர், நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதற்காக தன்னிலை அறியாதவர் என்பது போல மனுஷ்யபுத்திரன் குறிப்பிட்டு இழிவு படுத்தியிருக்கிறார். நல்ல மனநிலை, மற்றும் உடல் நிலையுடன் இருக்கும் பிரபஞ்சனை,  “தான் ஏன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது பிரபஞ்சனுக்கே தெரியுமா என்று தெரியவில்லை” என்று எழுவது நாகரீகமல்ல.

அதே பதிவில், “நான் வன்முறைக்கு ஆளாக்கபடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது நியாயங்களுக்காக நிற்பவர்களை  நன்றியுடன்   எங்களை அன்பினால் வெல்லலாம். அவதுறுகளால் வெறுப்பினால் ஒருபோதும் வெல்ல முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

இவர் மட்டும் பிறரை அடுத்தவரை வன்முறைக்கு ஆளாக்கலாமா.. அவதூறு செய்யலாமா” என்று ஆதங்கப்படுகிறார்கள்.