மும்பை,
வருமானத்துக்கு அதிகமான பணம் சேமிப்பவர்களை கண்டுபிடித்து, வரி வசூலிக்கும் வருமான வரித்துறையின் ஆணையரை லஞ்சம் பெற்றதாக சிபிஐ கைது செய்துள்ளது.
முப்பையில் 1.5 கோடி ரூபாயுடன் வருமான வரித்துறை ஆணையர் ஒருவர் கைது செய்யப் பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரி ராஜேந்திர பிரசாத் என்பவர் ரூ.1.5 கோடி பணத்துடன் சிபிஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். இது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வரி எய்ப்பு குறித்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக, ராஜேந்திர பிரசாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தைப் பறிமுதல்செய்துள்ளதுள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.
இந்த புகார் தொடர்பாக மேலும் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.