ஸ்ரீநகர்,
இந்திய எல்லையில் இந்திய ராணுவம் ஆவேச பதிலடி கொடுத்து வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் பதுங்கு குழிகள் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக தகவல்கள் வந்துள்ளன.
நேற்று பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இறந்த வீரர்களின் உடலை சிதைத்தும், தலையை அறுத்தும் அட்டூழியம் செய்துள்ளனர்.
இது இந்திய வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் பதிலுக்கு பதிலடியாக மே 1ம் தேதி இத்தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே பதில் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவ வீரர்களை நோக்கி நடத்தியுள்ளது.
எல்லை தாண்டிய தாக்குதல் நடைபெற்ற கிருஷ்ண காட்டி செக்டாருக்கு நேர் எதிரேயுள்ள பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் முஜாகிதீன் பட்டாலியனை சேர்ந்த பல வீரர்கள் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருந்துள்ளனர். இந்திய ராணுவம் இந்த பதுங்கு குழிகளை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், பாகிஸ்தான் ராணுவத்தின் முஜாகிதீன் பட்டாலியனை சேர்ந்த பல வீரர்கள் அங்குள்ள பதுங்கு குழிகளில் இருந்துள்ளனர்.
இந்திய ராணுவம் இந்த பதுங்கு குழிகளை குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பதிலடி பதிலடி இந்த பதிலடி தாதக்குதலில் பல பாகிஸ்தான் ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். அதில், 7 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக கடும் பதிலடியை கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.