கோவை:
கோவையில் ஜமாத் செயலாளரை கடத்த முயன்ற இஸ்லாமிய பயங்கரவாத கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த திராவிடர் விடுதலை கழக பிரமுகர் பரூக், இறை மறுப்பு கொள்கை குறித்து தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். இவரை இஸ்லாமிய பயங்கரவாதிகளான அன்ஷந்த், சதாம் உசேன், சம்சுதீன், ஜாபர், அக்ரம் ஜிந்தா, அப்துல் முனாப் ஆகியோர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இவர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், “ஃபாருக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எந்த வித உதவிகளும் செய்யப்படமாட்டாது” என்று கோவை மாவட்டஅனைத்து ஜமாத் கூட்டமைப்பின் செயலாளரும் தொழில் அதிபருமான இணையத்துல்லா அறிவித்திருந்தார்.
இதற்கிடையே அவரை கடத்தி பணம் பறிக்க ஜின்னா, ஷசிக்ரகுமான், நவுஃபல், சிட்டிபாபு ஆகிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் சோதனையைதீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், உக்கடம் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்றை நிறுத்தி காவல்துறை யினர் சோதனை நடத்தினர். காரில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. காரில் வந்த அந்த நால்வரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள்தான் ஜின்னா, ஷசிக்ரகுமான், நவுஃபல், சிட்டிபாபு ஆகிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, “இணையத்துல்லாவை கடத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டிருந்தோம். ஃபாரூக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அறுவரின் குடும்பத்திற்கு அந்த பணத்தை அளிக்க முடிவு செய்திருந்தோம்” என்று நான்கு பேர் கொண்ட அந்த பயங்கரவாத கும்பல் தெரிவித்தது.
இவர்கள் நால்வரையும் 4 பேரையும், 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர்,அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.