டில்லி:

பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, இந்தியா வந்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இந்திய வீரர்கள் உடலை பாகிஸ்தான் ராணுவம் சிதைத்திருக்கிறது. இது, இந்தியாவை ஆளும் பாஜக அரசின் ராஜதந்திர முயற்சிகளுக்குக் கிடைத்த தோல்வி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிதைக்கப்பட்ட வீரர்கள்

ஜம்மு – காஷ்மீரில், பாக்., ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த இருவர் பலியானார்கள்.  இந்த வீரர்களின் உடல்களை, பாக்., ராணுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்து வீசினர். இது இந்தியா முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்தும் தற்போதும் காஷ்மீர் சென்றுள்ளார்.

இந்த நிலையில், “தொடர்ந்து இந்திய பகுதிகளுக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பலியாவதுடன், அவர்களின் உடலை சிதைக்கும் செயலும் தொடர்கிறது.

ஒரு புறம், மத்திய பாஜக அரசின் ராஜதந்திர மற்றும் தைரியமான நடவடிக்கையால் பாக், சீனா உட்பட அண்டை நாடுகள் இந்தியாவை நினைத்து அஞ்சுகின்றன என்று பாஜக ஆதரவாளர்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். இதே தொணியில் பிரதமர் மோடியும் பேசி வருகிறார்.

ஆனால் இந்தியா மீதான தாக்குதல்களை பாக். தொடர்கிறது. அதன் உச்சமாக, இருவீரர்களின் உடல் சிதைக்கப்பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த தோல்வி” என அரசியல்விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.