கண்ணூர்:
கேரளாவில் கண்ணூர் மாவட்டம் முற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பை இல்லா இய க்கத்தை 5 மாதங்களில் நடத்தி வெற்றிக் கண்டுள்ளது.
கடந்த நவம்பர் 1ம் தேதி பிளாஸ்டிக் கேரி பைகள் ஒழிப்பு திட்டம் கண்ணூர் மாவட்டத்தில் தெ £டங்கப்பட்டது. இதற்கு ஏதுவாக கைத்தறி பை தயாரிக்கும் கூட்டுறவு சங்கங்கள் பெரிய அளவில் ஊ க்குவிக்கப்பட்டன. ஏப்ரல் 2ம் தேதிக்குள் இந்த இலக்கை அடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஊராட்சியும் இணைந்து இந்த பணியை மேற்கொண்டன.
5 மாதங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றி கண்ணூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. நல்ல நா டு..நல்ல மண்ணு என்ற சுலோகத்துடன் தொடங்கப்பட்டது. அதாவது நல்ல கிராமம்.. நல்ல மண்ணு என்ற அடிப்படையில் இது செயல்படுத்தப்பட்டது. நாட்டிலேயே பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பைகள் இல்லாத முதல் மாவட்டமாக கண்ணூர் திகழ்கிறது.
பிளாஸ்டிக் கப், பிளேட், பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் கேரி பை ஆகியவற்றை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தீவிர தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்களில் கழிவு பொருட்கள் சேருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
‘‘மாவட்டத்தில் சாலைகள், பொது இடங்கள், நீர்நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்கள், கழிவுகள் விதிமீறி குவித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து மாவட்ட காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று எஸ்.பி சிவா விக்ரம் தெரிவித்தார். சோதனை மூலம் சிக்குபவர்களுக்கு பெரிய அளவில்அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஷாப்பிங் மால்கள், ஹைபர் மார்கெட்கள், கேட்டரிங் முகமைகள், ஆடிட்டோரியம் போன்ற இடங்களில் கைத்தறி பைகள் பயன்பாடு ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. கைத்தறி பெட்டிகள் மற்றும் பைகள் உணவு பேக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் கேரி பை, கழிவுகள் இல்லாத மாவட்டம் என்ற சாதனையை கண்ணூர் படைத்துள்ளது. தயாரிப்பு நிறுவனங்கள், மார்க்கெட், கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், கலெக்டர் மிர் முகமது அலி, பஞ்சாயத்து தலைவர் சுமேஷ் ஆகியோர் ஒத்துழைப்புடன் பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மீறி பிளாஸ்டிக் கப்ல, பிளேட், கேரி பை, விநியோகம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டு பின்னர் பாதியிலேயே நிறுத்தப்படும் சூழல் தான் பெரும்பாலான விஷயங்களில் நடந்துள்ளது. ஆனால் கண்ணூர் மாவட்டத்தில் இந்த திட்டம் தொடர் இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. தீவிர இயக்கம் மூலம் இந்த திட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி எ டுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மனம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்பதற்கு இது நல்ல உதாரணமாக உள்ளது.