டெல்லி:

சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தையில் 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தை ஆப்பிள், அதனை தொடர்ந்து ஹூவாய் 3ம் இடம் பிடித்துள்ளது. சர்வதேச டேட்டா கழகம் ஆய்வு அறிக்கையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் விநியோகம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில் முதல் காலாண்டு நிலவரப்படி சர்வதேச சந்தையில் மொத்தம் 34.7 கோடி ஸ்மார்ட்போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி ஸ்மார்ட்போன் வர்த்தகம் சிறியஅளவில் சரிவை சந்தித்தது. இந்த சரிவு ஸ்மார்ட்போன் வரலாற்றில் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் படி சாம்சங் முதல் காலாண்டில் 22.8 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆப்பிள் 14.9 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. 3ம் இடம் பிடித்துள்ள ஹூவாய் 9.8 சதவிகித புள்ளிகளை பெற்றுள்ளது.