கம்போடியா கவர்ச்சி நடிகை ஒருவருக்கு ஒரு வருடம் படங்களில் நடிக்க அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கம்போடியா நாட்டைச் சேர்ந்தவர் நடிகை டேனி குவான். 24 வயது. இவர் வரிசையாக பல படங்களில் கவர்ச்சியாக ஆடை அணிந்து நடித்ததாகவும், பேஸ்புக்கில் கவர்ச்சியாக பட்ம் வெளீயிட்டதாகவும் புகார் எழுந்தது. அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும், கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.
இதையடுத்து இவரை சமீபத்தில் கம்போடியா கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சரக அதிகாரிகள் நேரில் அழைத்து பேசினர். ஆபாசமாக நடித்தற்கு அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அவரை ஒரு வருடத்திற்கு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று அமைச்சக அதகிரிகள் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து டேனி குவான் கூறுகையில், ‘‘என்னை விட மற்ற நடிகைகள் பலரும் வரைமுறை இல்லாமல் கவர்ச்சியாக நடித்து வருகிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் நான் ஒன்றும் பெரிதாக கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை என்னுடைய தோற்றம் அவர்களுக்கு அந்த மாதிரி எண்ணத்தை தூண்டியிருக்கலாம். நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால், என்னுடைய கலாச்சாரமும், கம்போடியா மக்களும் அதை ஏற்க மறுக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]