வட கொரியா பொம்மை ஆயுதங்களை வைத்து பலம் காட்டியுள்ளதை அமெரிக்க ராணுவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகளை தகர்ப்போம் எஎன்று கூறி வருகிறது. வரலாறு காணாத வகையில் பீரங்கி தாக்குதல் பயிற்சியை அதிபர் கிம் ஜாங்-உன் முன்பு அந்நாட்டு ராணுவம் நடத்தியது. இந்த பயிற்சியில் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இடம்பெற்றன.
வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல் சொங்கின் 105வது பிறந்த முன்னிட்டு பியோங்யாங்கில் ராணுவ அணிவகுப்பை நடத்தியது வட கொரியா. 300 பெரிய துப்பாக்கி சுழற்சிகளால் இயக்கப்படும் துப்பாக்கி பீரங்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்து வந்த காட்சிகள் வெளியாயின. வட கொரியாவின் 85-வது ராணுவ வருடத்தை குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில், அணிவகுப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வட கொரியா வெளியிட்டது. இந்த புகைப்படங்கள், வீடியா காட்சிகளை அமெரிக்க ராணுவ நிபுணர் குழு பரிசோதனை செய்தது. அணிவகுப்பின் போது பல ராணுவ வீரர்கள் கையில் வைத்திருந்தது பொம்மை ஆயுதங்கள் என அந்த குழு தெரிவித்துள்ளது.
வீரர்கள் அணிந்திருந்த கண்ணாடி கூட போலி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா வீரர்கள் வைத்திருந்த பல துப்பாக்கிகள் உண்மையானவை அல்ல. உலகிற்கு தங்களின் வலிமையை காட்ட வீரர்களிடம் போலி ஆயுதங்களை வழங்கி அணி வகுப்பில் வடகொரியா ஈடுபட வைத்துள்ளது என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.