ரியாத்:
பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேர் சவுதியில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் தாமாக முன்வந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் தூதரகம் மூலம் அவரவர் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்ற பொது மன்னிப்ப அளிக்கும் திட்டத்தை கடந்த மாதம் 29ம் தேதி அந்நாட்டு அரசு அறிவித்தது. இதையடுத்து ஜெத்தா, மதினா பகுதியில் தங்கியுள்ள 6 ஆயிரம் பாகிஸ்தான் நாட்டினர், 3 ஆயிரத்து 655 இந்திய தொழிலாளர்கள் சவுதியில் இருந்து வெளியேர தூதரகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டினர் 6 ஆயிரம் பேர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 ஆயிரம் பேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே பிலிபைன்ஸ் அதிபர் துயுரதி சவுதி வந்தபோது 138 தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுடன் வெளியேறினர். இவ்வாறு நாடு திரும்பிய தொழிலாளர்கள் பலர் தவறாக நடத்தப்பட்டதாகவும், ஊதியம் வழங்காமல் வீட்டு வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்த க்கது.
சவுதியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் தங்களது குடிமகன்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சவுதியின் பொது மன்னிப்பு அறிவிப்பு சமூக வளைதளங்களில் பல நாட்டு மொழிகள் மூலம் பரப்பப்பட்டது. அதனால் இந்த தகவல் நாடு முழுவதும் பரவியுள்ளது. சட்டவிரோத தொழிலாளர்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக இ ந்த அறிவிப்பை சவுதி வெளியிட்டது. நாட்டின் பொருளாதாரம், கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சி காரணமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை சவுதி அரசு செயல்படுத்தி வருகிறது.
பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேர் சவுதியில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொதுமக்கள் பங்களிப்பு, மானியம் ரத்து, அரசு நிறுவனங்களில் தனியார் மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம் குறைப்பு, அனைத்து ஷாப்பிங் மால் பணிகள் சவுதியர்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்பு போன்ற நடவடிக்கைகளை சவுதி மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.