டில்லி,

ரூ.2262 கோடி முறைகேடு வழக்கில் பிரபல கண் மருத்துவமனை நிறுவனமான வாசன் கண் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகத்தின் பெரிய கண் மருத்துவமனைகளுள் ஒன்றான வாசன் கண் மருத்துவமனை  500-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தமிழகத்தில் கண் மருத்துவப் பணியை செய்து வருகிறது.

‘தற்போது   இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் கிளைகளைத் திறப்பதன் வாயிலாக உலகின் மிகப்பெரிய கண் மருத்துவமனையாக வளரவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது.

460 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால்,  வாசன் கண் மருத்துவமனையை மூடக் கோரும் வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

வாசன் கண் மருத்துவமனனயின் சொத்து மதிப்பு 2014-ஆம் ஆண்டில் ரூ. 5,500 கோடி; அன்னிய முதலீடாக ரூ. 192 கோடியையும் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும் ரூ223 கோடி கருப்புப் பண பரிவர்த்தனை விவகாரத்திலும் வாசன் கண் மருத்துவமனை சிக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய அமலாக்கத்துரை ரூ.2262 கோடி முறைகேடு வழக்கில் வாசன் மருத்துவமனை நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.