North Korean crisis averted, but tensions remain dangerously high
வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியடைந்து விட்டாலும், அப்பகுதியில் போர்ப்பதற்றம் தணிந்த பாடில்லை.
வடகொரியாவை நிறுவிய கிம் உல் சுங்கின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், அணிவகுத்த ஏவுகணைகளும், அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையும் இந்தப் பதற்றத்தை அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் பத்துநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், பல்வேறு நாடுகளுடனும் இதுகுறித்து பேசி வருகிறார்.
தென் கொரியாவுக்கு ஆதரவான அமெரிக்கா, வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், வடகொரியாவுக்கு ஆதரவான சீனாவும் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
முன்னதாக ஏவுகணை சோதனையை நடத்த வேண்டாம் என சீனா வலியுறுத்தியும் அதனை மீறி வடகொரியா அந்த சோதனையை நடத்தியது. இதனால், வடகொரியாவைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சீனா கருதுகிறது. இதனிடையே, பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வடகொரியா கைவிட வேண்டும் என ஜப்பானும் கூறியுள்ளது.